"லாட்டரி திட்டத்தை கொண்ட வர வேண்டும்" காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம்!

"லாட்டரி திட்டத்தை கொண்ட வர வேண்டும்" காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம்!
Published on
Updated on
1 min read

உயர்கல்விக்காக லாட்டரி திட்டத்தை அரசு கொண்டு வரலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் முகாம் நடந்தது. இம்முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி ஆகியோர் கல்விக்கடன் ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கினர். 

அப்போது கார்த்தி சிதம்பரம் எம்.பி., பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில், உயர்கல்விக்காக லாட்டரி திட்டத்தை அரசு கொண்டு வரலாம் எனக் கூறினார். தொடர்ந்து இது பற்றி பேசுகையில், தமிழ்நாட்டில் 8 கோடி பேர் உள்ளனர்.  ஒரு கோடி பேர் வாரத்திற்கு ரூ.100 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கினால் மொத்தம் 100 கோடி வசூலாகும். இதில் பரிசுதொகை மற்ற செலவுகளுக்கு 10 கோடி செலவாகும். மீதி 90 கோடி உள்ளது. ஆண்டுக்கு 50 வாரம் என்றால் 4500 கோடி வசூலாகும். இந்த தொகையை உயர்கல்வி படிப்பவர்களின் படிப்பு செலவுக்கு அரசு செலவிடலாம்.

மேலை நாடுகளில் உயர்கல்வி முழுவதும் இலவசம். அதே போல் தமிழக அரசும் உயர்கல்விக்கு கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்தலாம். இதனால் கடன் கொடுக்க வேண்டிய வேலையே இல்லை. நல்ல காரியத்திற்காக மொய் விருந்து வைக்கிறோம். அதே போல் நல்ல காரியத்திற்காக லாட்டரியை கொண்டு வரலாம் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com