"ஸ்மார்ட்சிட்டி ஊழலில் கவர்னருக்கு தொடர்பு" வைத்திலிங்கம் தகவல் !

"ஸ்மார்ட்சிட்டி ஊழலில் கவர்னருக்கு தொடர்பு" வைத்திலிங்கம் தகவல் !

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறை படுத்துவதில் ஊழல் முறைகேடு நடப்பதாகவும் இதில் கவர்னருக்கும் தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி (மக்களவை உறுப்பினர்) வைத்தியலிங்கம், புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தற்போது தாமதப்படுத்தப் பட்டுள்ளதாகவும், இதில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இந்த முறைகேடுகளில் அதிகாரிகள் முதல் கவர்னர் வரை சம்பந்தப்பட்டுள்ளனர்.  எனவே, இதன் மீது சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மதுபான கொள்கையில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஆளுநர் தெளிவு படுத்த வேண்டும் என்றும் புதுச்சேரியில் அதிகமான மதுபான கடைகளை திறந்து அரசு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பிரச்சனைக்களுக்காக குரல் கொடுத்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிகத்தக்கது என்றார்.

இதையும் படிக்க:முதலிடம் பிடித்த பல்கலைகழகம்... கொண்டாடி தீர்த்த மாணவர்கள்!