தொடரும் தாக்குதல்கள்: குடிசைகளில் தஞ்சம் அடைந்த பாலஸ்தீனியர்கள்

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் கான்யூனிஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனா்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போா் 17-வது நாளாக தொடா்ந்து நீடித்து வருகிறது.

இதனையடுத்து காசா பகுதியில் இஸ்ரேல் தொடா் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான  மக்கள் உயிாிழந்தனா்.

இதனையடுத்து அங்கு வசிக்கும் பாலஸ்தீனியர்கள் கான்யூனிஸ் பகுதிக்கு குடும்பம் குடும்பமாக தஞ்சம் அடைந்து வருகின்றனா். ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள குடிசைகளில் தஞ்சமடைந்துள்ளனா். 

இதையும் படிக்க   |  ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலஙளில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு