அடேங்கப்பா...தேசிய கட்சிகளுக்கு நன்கொடையை வாரி வழங்கிய கார்பரேட் நிறுவனங்கள்

தேசிய கட்சிகள் கார்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடையாக பெற்ற தொகை குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அடேங்கப்பா...தேசிய கட்சிகளுக்கு நன்கொடையை வாரி வழங்கிய கார்பரேட் நிறுவனங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய கட்சிகளில் ஒன்றான பாஜக கடந்த 2019 -20 ஆண்டில் 785 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் 139 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 8.08 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் 1. 29 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 19.69 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி 59.94 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.