கள்ளச்சாராய வியாபாரம் - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்!

கள்ளச்சாராய வியாபாரம் - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்!
Published on
Updated on
1 min read

விழுப்புரம்  மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி  உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில், வாந்தி மயக்கம் ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுரேஷ், தரணி, வேலு சங்கர் என்ற மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதை தொடர்ந்து, மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கள்ளச்சாராய வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று, சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com