மனைவியை ஆபாச படம் எடுத்து வெளியிடுவேன் என மிரட்டிய கணவனுக்கு ............நீதிமன்றம் அதிரடி

மனைவியை ஆபாச படம் எடுத்து வெளியிடுவேன் என மிரட்டிய கணவனுக்கு ............நீதிமன்றம் அதிரடி

மனைவியை ஆபாசமாகப் படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய கணவருக்குத் திருச்சி நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில், கடந்த 19. 03. 2018ம் தேதி பெண் ஒருவர் தன்னை ஆபாசமாகப் படம் பிடித்து 'சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாகப் கணவர் மிரட்டுவதாகப் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | இதுதான் சங்கமமா...தமிழ்நாட்டிற்கு செய்யும் வஞ்சகம்...” சு.வெங்கடேசன்

இந்த புகாரை அடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கின் புலன் விசாரணையை முடிந்து, கரூரைச் சேர்ந்த தேவ் ஆனந்த் என்பவரை போலிஸார் கைது செய்தனர். பின்னர் கடந்த 20.09.2018-ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி பாலாஜி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் படிக்க|இலவச கட்டாய கல்வி...! ஏப்ரல் 20ல் மாணவர் சேர்க்கை 

அதில் தேவ் ஆனந்த் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,20,000 இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என நீதிபதி பாலாஜி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்