மீண்டும் கட்டணத்தை உயர்த்திய எழும்பூர் மெட்ரோ நிர்வாகம்...ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள்...ஊழியர்கள் சொன்ன பதில் என்ன?

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய எழும்பூர் மெட்ரோ நிர்வாகம்...ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள்...ஊழியர்கள் சொன்ன பதில் என்ன?
Published on
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகரித்துள்ளதை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் மெட்ரோ நிர்வாகம்:

சென்னை எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் என ஏராளமானோர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனா். அதற்காக மெட்ரோ நிர்வாகம் மாதந்தோறும் கட்டணம் வசூலித்து வருகிறது. 

அடுத்தடுத்து அதிகரித்து வந்த கட்டணம்:

அதன்படி, கடந்த நவம்பர் மாதம் இருசக்கர வாகனத்திற்கு 250 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 2000 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் இருசக்கர வாகனத்திற்கு  500 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 3000 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய மெட்ரோ நிர்வாகம்:

இந்த நிலையில் சென்னை எழும்பூர், விமான நிலையம் மற்றும் மண்ணடி உள்ளிட்ட  மெட்ரோ ரயில் நிலையங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை 250 ரூபாய் உயர்த்தி 750 ரூபாயாக வசூலிக்கப்பட்டது. 

ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள்:

இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் மெட்ரோ நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய மெட்ரோ நிர்வாக ஊழியர்கள், பார்க்கிங் கட்டண உயர்வுக்கான விளக்கம் நாளை அளிக்கப்படும் எனவும், உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக கலந்தாலோசிப்போம் என மெட்ரோ நிறுவன ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com