சந்து பொந்தில் சிந்து பாடி குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த திமுக...!!!

சந்து பொந்தில் சிந்து பாடி குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த திமுக...!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

எதுவும் செய்யாத அரசு:

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுக்கூட்ட விழாவில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அதிமுக 10 ஆண்டு காலம் ஆட்சி முடிந்து திமுக 2 ஆண்டுகள் ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் இரண்டு வருடத்தில் மக்களுக்கு எதுவும் செய்தது கிடையாது எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி அதிமுக ஆட்சிகாலத்தில் இருந்த எல்லா திட்டத்தையும் நிறுத்தியது திமுக ஆட்சி எனக் கூறினார்.

நிறுத்தப்பட்ட திட்டங்கள்:

மேலும் அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செயல்படுத்தினார் எனவும் அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை நிறுத்தி விட்டனர் எனவும் சைக்கிளில் பெல் இல்லை பெடல் இல்லை எனவும் தரமற்ற சைக்கிளை திமுக அரசு கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

உயர்ந்த விலை:

திமுக அரசு அனைத்து வரியை இரு மடங்காக உயர்த்தியுள்ளது எனவும் மின்கட்டண உயர்வு, மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் ஒரு செங்கலின் விலை ஐந்து ரூபாயாக இருந்தது எனவும் திமுக ஆட்சியில் ஒரு செங்கலின் விலை 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் திருச்சியில் இருந்து மணல் கொண்டு வந்தால் ஐம்பதாயிரம் ரூபாய் இதுதான் திமுக ஆட்சி எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாதனைகள்:

கடந்த இரண்டு வருடங்களில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வராத ஸ்டாலின் அவரது மகனை அமைச்சராக்கிய சாதனையை மட்டும் தான் செய்துள்ளார் எனக் கூறினார்.  திமுகவை பற்றி யாராவது பேசினால் அவர் மீது சிக்கலை உருவாக்கி வழக்குகளை போடுவது மட்டும்தான் தெரியும் திமுகவிற்கு எனவும் விமர்சித்துள்ளார்.

பொய் வழக்குகள்:

எடப்பாடி மீது போட்ட வழக்கை விருதுநகர் மாவட்டம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் எடப்பாடியார் மீது போட்ட பொய் வழக்கிற்க்கு அதற்க்கான பதிலடியை அதிமுக கொடுக்கும் எனவும் அதை திமுக அரசு ஏற்க வேண்டி இருக்கும் எனவும் பேசினார்.

பொய் வழக்குகளை யார் மீது வேண்டுமானாலும் போடலாம் எனவும் இப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா? என்பதையும் பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் ஆட்சி:

அதிமுக கூட்டணியில் சிறு சுனுக்கம் ஏற்பட்டுவிட்டது சரியான சந்தர்ப்பத்தை பார்த்து சந்து பொந்தில் சிந்து பாடி குறுக்கு வழியில் தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது எனக் கூறிய முன்னாள் அமைச்சர் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று மக்களிடம் எழுச்சியும் உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது எனவும் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் கூறினார்.  

மேலும் நிச்சயமாக ஆட்சியையும் அதிகாரத்தையும் பிடிப்போம் எனவும் நாட்டு மக்களுக்கு உழைப்போம் அதிமுக மீண்டும் நிச்சயமாக ஆட்சியை பிடிப்போம் எனவும் நம்பிக்கையாக பேசினார்.

இதையும் படிக்க:   கம்பீரமாக நடைபயிலும் 'கிளிமூக்கு விசிறிவால் சேவல்'...!