" இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு -ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்....." என திமுக கூறுவது பெண்களுக்கு எதிரானது..! புதுச்சேரி பாஜக.

புதுச்சேரியில் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு அறிவிப்பு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என திமுக கூறுவது பெண்களுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சாமிநாதன் பேசுகையில்,
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் 200 இடங்களில் பாஜக சார்பில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், சுமார் 30,000 நிர்வாகிகள் பார்க்கக் கூடிய வகையில் இதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இரண்டு மணி நேர வேலை குறைத்ததை 'ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்' என திமுக விமர்ச்சித்துள்ளது ஏற்புடையதல்ல என்று கூறினார்.
இதையும் படிக்க } இனி பெண்கள் வேலைக்கு லேட்டா வரலாம்..! புதுச்சேரியில் அரசு துறை பெண்களுக்கு புதிய சலுகை..!
மேலும், புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவாவின் இந்த கருத்து பெண்களுக்கு எதிரான கருத்து எனவும், இதனை பாஜக வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க } திராவிட மாடல் அரசு திராவிடர்களுக்கு மட்டும்தானா... ஆதிதிராவிடர்களுக்கானது இல்லையா?!!