இன்னும் 20 ஆண்டுகள் திமுக தான் தமிழகத்தை ஆள வேண்டும்....!!

இன்னும் 20 ஆண்டுகள் திமுக தான் தமிழகத்தை ஆள வேண்டும்....!!

தமிழ்நாட்டை போல் ஒரு முதலமைச்சர் நமக்கு இல்லையே என்று மற்ற மாநில மக்கள் ஏங்கும் நிலையில் உழைப்பின் மூலம் உருவாக்கி கொண்டிருப்பவர் தான் நம் முதலமைச்சர்.

அன்பு கோட்டை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார்.  அப்போது
தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலக கோட்டை சென்னை என்றாலும் அவரின் அன்பு கோட்டை, கழக கோட்டை என்றால் அது திருச்சி மலைக் கோட்டை தான் என்று தெரிவித்தார்.  

மக்களின் ஏக்கம்:

மேலும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை சார்ந்திருக்கின்ற மக்கள் எல்லாம் ஏங்குவது ஒன்றே ஒன்று தான் எனக் கூறிய அமைச்சர் அது என்னவென்றால் தமிழ்நாட்டை போல் ஒரு முதலமைச்சர் நம்முடைய மாநிலத்திற்கும் வேண்டும் என்பதே எனக் கூறினார்.

இந்தியாவின் நம்பர் 1:

தொடர்ந்து பேசிய அவர் இயக்கத்தை உழைப்பின் மூலம் உருவாக்கி தந்தவர் தான் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எனவும் மாநில உரிமை, ஜனநாயக உரிமை காப்பத்தில் முதல் வரிசையில் இருக்கும் முதலமைச்சர் யார் என்றால் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சராக உள்ள நம் முதலமைச்சரை உணர்ந்த காரணத்தினால் தான் மற்ற மாநிலங்களில் இதுபோன்ற ஒரு முதலமைச்சர் வேண்டும் என்று சொல்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.  

20 ஆண்டுகள்:

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது 20 மாத காலத்தில் இந்த ஆட்சியின் சாதனைக்காக கிடைத்த வெற்றி மட்டுமல்ல எனவும் இன்னும் 20 ஆண்டுகள் திமுக தான் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் நமக்கு அளித்த வாக்கு எனவும் கூறினார்.

இதையும் படிக்க:   23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம்....!!!