ஐஐடியில் தொடரும் உயிரிழப்புகள்.... மாணவர்கள் நள்ளிரவு போராட்டம்!!

ஐஐடியில் தொடரும் உயிரிழப்புகள்.... மாணவர்கள் நள்ளிரவு போராட்டம்!!

தொடரும் ஐஐடி மாணவர்களின் மரணத்தையும், மறைக்க நினைக்கும் நிர்வாகத்தையும் கண்டித்து மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தற்கொலை:

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐஐடியில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற மாணவர் வேளச்சேரியில் உள்ள அவரது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது சமூக வலைதள பக்கங்களில் என்னை மன்னித்து விடுங்கள், இத்துடன் என்னை முடித்துக் கொள்கிறேன் எனவும் இறப்பதற்கு முன்னர் பதிவிட்டிருந்தார். 

ஆர்ப்பாட்டம்:

இவ்விகாரம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சச்சின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி நள்ளிரவு நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆய்வு குழு:

சச்சின் மரணத்திற்கு காரணமான அவரின் வழிகாட்டி பேரராசிரியர் அகிஷ் குமார் சென் , அதை மறைக்க நினைக்கும், மாணவர்களின் டீன் நிலேஷ் வச ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் மேலும் இது போன்ற மாணவர்களின் தற்கொலை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஓர் ஆய்வு குழு அமைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

8 மாணவர்கள்:

ஐஐடி நிறுவனம் மாணவர்கள் தற்கொலை விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.  இன்னும் முடிவடையாமல் இருக்கும் இந்த கல்வியாண்டில் மட்டும் 8 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  2 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளனர்.  பேராசிரியர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே சச்சின் தற்கொலை செய்துள்ளார்.  இது தற்கொலை அல்ல கொலை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க:    “இதற்கெல்லாம் கை கட்டி ஆளுநர்கள் பதிலளிக்க வேண்டிய நேரத்தில்....” கனிமொழி பேச்சு!!