" பணமதிப்பிழப்பு; மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.." - சீமான்.

" பணமதிப்பிழப்பு; மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.." -  சீமான்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடித்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.‌ அப்போது அவர் பேசுகையில், இந்த திரைப்படம் ராமநாதபுரம் மக்களின் வாழ்வியலை அழகாக எடுத்துரைக்கிறது என்றும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் அந்த மண்ணின் மைந்தனாகவே  வாழ்ந்து இருக்கிறார் எனவும் பாராட்டினார். நடிகர் சாந்தனுவின் திரைப்படம் ராமநாதபுரம் மக்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது என்றார்.

Raavana Kottam

தொடர்ந்து சீமான்‌ பேசுகையில், இந்த திரைப்படத்தில் காமராஜரை இழிவு படுத்தியதாக நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  படத்தில் அப்படி ஏதும் இல்லை என பதிலளித்தார். அதே, நேரத்தில் காமராஜரும் வேண்டுமென்றே இதை செய்யவில்லை என நினைப்பதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "பண மதிப்பிழப்பு  மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் விவகாரத்தில் மத்திய அரசு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; நாட்டையும் மக்களையும் பைத்தியம் போல அரசு நினைக்கிறது; ஒரே நாள் இரவில் பணம் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. 50 நாட்கள் கொடுங்கள் ஊழல் அற்ற ஆட்சி கொடுப்போம் என தெரிவித்தார்கள் தீவிரவாதத்தை முழுமையாக அழிப்போம் என தெரிவித்தார்கள். ஆனால் அதன் பிறகு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது.

RBI data reveals demonetization was a failure, 99% of banned cash recovered  | SabrangIndia

" ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தீர்கள் செல்லாத ரூபாய்களை மாற்ற மக்கள் எத்தனை பேர் வரிசைகள் நின்று இறந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். அரசு 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற செப்டம்பர் இறுதிவரை நேரம் கொடுத்திருக்கிறது. ஆனால் எந்த ஒரு கடையிலும் அதனை வாங்க மறுக்கிறார்கள் " என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க     } "முதலமைச்சரை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறாா்" - தலைமை கொறடா கோவி செழியன். 

மேலும், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகள் தமிழகத்தில் பாதுகாப்பு நலன் கருதி கூண்டுக்குள் இருக்கிறது என்றும், இதனைப் பார்க்கும் பொழுது தற்பொழுது எனக்கு வேதனையாக இருக்கிறது என்றும் கூறினார்.

அதோடு, தமிழகத்தில் நேரு, காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றதாகவும், ஆனால் வட இந்தியாவில் யாரேனும் ஒருவருக்கு காமராஜர் பெயரோ முத்துராமலிங்கத் தேவர் பெயரோ சூட்டப்படுகிறதா? என்றும் கேளிவி எழுப்பினார்.  

இதையும் படிக்க     }  நிர்மலா சீதாராமனுக்கு ரூ.2000 நோட்டு தொடர்பாக அண்ணாமலை கடிதம் !!!