கொடநாடு வழக்கு: "சிபிசிஐடி-யிடம் அனைத்தையும் தெரிவிக்க போகிறேன்" தனபால் பகீர் தகவல்!!

கொடநாடு வழக்கு: "சிபிசிஐடி-யிடம் அனைத்தையும் தெரிவிக்க போகிறேன்" தனபால் பகீர் தகவல்!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்கள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் பேரம் பேசினார் என ஜெயலலிதா கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன் தனபால் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் செல்போன் தடையங்களை அளித்தும், சாட்சியங்களை மாற்றுதல், வழக்கை திசை திருப்புதல், சாட்சியங்களை அளித்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினரான ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தும் தனபால், ரமேஷ் ஆகியோர் பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தனபால், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்கள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் பேரம் பேசினார் என தெரிவித்துள்ளார்.

மேலும், தான் மனநலம் பாதிக்கப்படவில்லை, நல்ல நிலையில் தான் இருக்கிறேன் என்றும் வரும் 14ம் தேதி சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கொடநாடு வழக்கு தொடர்பாக தனது தம்பி கூறிய அனைத்து தகவல்களையும் தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || கொடநாடு வழக்கு: தனபால் மனைவியிடம் இபிஎஸ் தரப்பினர் பேரம்!!