அண்ணாமலையை மீண்டும் சந்தித்தீர்களா...? செய்தியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

அண்ணாமலையை மீண்டும் சந்தித்தீர்களா...?  செய்தியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
Published on: 
Updated on: 
1 min read

ஒரு வாரத்தில் மீண்டும் வந்து சந்திக்கும் படி கூறிய அண்ணாமலையை சந்தித்தீர்களா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.  


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி அமைப்பு சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஆடியோ விவகாரம் குறித்து செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், ஒரு வாரத்தில் மீண்டும் வந்து சந்திக்குமாறு அண்ணாமலை கூறினாரே... அவரை மீண்டும் சந்தித்து கேள்வி கேட்டீர்களா என்று எதிர் கேள்வி கேட்டார்.  

மேலும், கர்நாடகா தேர்தல் கூட்டத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலையிடம் கேள்வி கேட்டீர்களா என்றும் செய்தியார்களிடம் கேள்வி எழுப்பிய உதயநிதி, ஐ.டி.ரெய்டுகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும், திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்றும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com