இங்கிலாந்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள்...!!!

இங்கிலாந்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள்...!!!

இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில் பேருந்து ஓட்டுநர்கள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையை விட்டு வெளியேறி உள்ளனர்.  இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட முக்கியமான சேவைகள் மட்டுமே தற்போது வழங்கப்படுகின்றன.  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   லிபியாவின் கூஸ்கஸ் திருவிழா.... உலக சாதனை முறியடிப்பு!!!