அடுத்த 10 நாட்களில் பத்திரப் பதிவுக்கான ஆவணங்கள்....!!!

அடுத்த 10 நாட்களில் பத்திரப் பதிவுக்கான ஆவணங்கள்....!!!
Published on
Updated on
1 min read

அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் வரும் 25-ஆம் தேதி செயல்பட வேண்டும் என பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை கூட்டரங்கில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், அடுத்த 10 நாட்களில் பத்திரப் பதிவுக்கான ஆவணங்கள் அதிக அளவில் வரும் என எதிர்பார்க்கப் படுவதால், நாள்தோறும் அளிக்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  

இந்த கூட்டத்தில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com