"மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தேன்" மு.க.ஸ்டாலின் பெருமிதம்! 

"மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தேன்" மு.க.ஸ்டாலின் பெருமிதம்! 

சென்னையில் தான் மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தாக முதலமைச்சர் முகஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்டீபன்சன் பாலத் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் இதனை தெரிவித்தார். அண்ணா மேம்பாலம், கத்திபாரா மேம்பாலம் என திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் மற்றும் நல திட்டங்களை அவர் பட்டியலிட்டார். 

நல்ல பல திட்டங்களை நமக்கு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி என பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் வழியில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால், மழைக் காலத்தில் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் தான் மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தாக பெருமிதம் தெரிவித்தார். மக்களின் எதிர்காலத் தேவை கருத்தில் கொண்டு அனைத்து பணிகளையும் திமுக அரசு செய்து வருவதாகவும் முதலமைச்சர் அப்போது  கூறினார்.

இதையும் படிக்க:"பழங்குடி சாதி சான்றிதழ் கேட்டப் பெண்ணை அலைய விட்ட கோட்டாட்சியருக்கு 50 ஆயிரம் அபராதம்" உயர் நீதிமன்றம் அதிரடி!