'ஆபரேஷன் காவேரி' எதிரொலி...! சூடானிலிருந்து மீட்கப்பட்ட மதுரையை சேர்ந்த குடும்பம்...!

'ஆபரேஷன் காவேரி' எதிரொலி...! சூடானிலிருந்து  மீட்கப்பட்ட மதுரையை சேர்ந்த குடும்பம்...!

சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிய சிக்கலான சூழலில் அங்கிருந்து இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் பொருட்டு 'ஆபரேஷன் காவேரி' எனும் பெயரில், இந்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்  முதற்கட்டமாக வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் 360 இந்தியர்கள் மீட்டுப்பட்டு ஜெட்டாவில் இருந்து புதுடெல்லிக்கு விமான மூலம் நேற்று அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இதில் ஒன்பது தமிழர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னை மற்றும் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜோன்ஸ் திரவியம் என்பவரும், அவரது மனைவி ஷீபா மற்றும் அவரது மகள்கள் ஜென்சி ஜேசன், ஜோஸ்ன ஜோன்ஸ் ஆகியோர் மதுரைக்கு வந்த 4 பேரையும் தமிழக அரசு சார்பில் அவர்களின் உறவினரின் ஊரான திண்டுக்கல் மாவட்ட மேட்டுப்பட்டியில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் திரவியம் 2001 ஆம் ஆண்டு ஷீபா என்ற பெண்ணை மணந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜென்சி ஜோன்ஸ் மற்றும் ஜோஷ்னா ஜோன்ஸ் என இரண்டு மகள்கள் உள்ளனர். 

ஜோன்ஸ் திரவியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், அவர் 15 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்பத்துடன் சூடான் நாட்டில் ஆசிரியர் பணிக்காக சென்று பணியாற்றி வந்ததாகவும்,  தொடர்ந்து., அங்கு பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடந்தி வந்த நிலையில் அவரது உடமைகள் சூடானிலேயே இருந்ததாகவும்  வேதனையுடன் தெரிவித்தார். மேலும் அவர், தங்களின் குழந்தைகளின் கல்வி தொடர்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய அரசு மற்றும் தமிழக அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க    }  கல்குவாரி செயல்பட தடை - நீதிமன்றம் உத்தரவு - காரணம் என்ன?

தொடர்ந்து சூடான நாட்டில் சிக்கி உள்ள தமிழர்களின் குடும்பத்தார் தகவல் பரிமாற்றிக் கொள்ள தமிழக அரசை தொடர்பு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிக்க    }  வாத்தியார் குச்சியை வைத்து மிரட்டுவது போல சபாநாயகர் மிரட்டுகிறார்...! அன்புமணி காட்டம்...!!