ரூ.1,000 உரிமைத் தொகை - முதலமைச்சர் ஆலோசனை ..!

ரூ.1,000 உரிமைத் தொகை - முதலமைச்சர் ஆலோசனை ..!

Published on

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொள்கிறார்.

திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 3 மணி அளவில் முதலமைச்சர் ஆலோசனை செய்ய உள்ளார்.

அப்போது, யார் யாருக்கு எல்லாம் ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனையில், ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், வருவாய்துறை, கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com