பிரிந்து சென்ற காதலி - குத்தி கொல்ல முயன்ற மாமாகுட்டி - 5 ஆண்டு சிறை

பிரிந்து சென்ற காதலி - குத்தி கொல்ல முயன்ற மாமாகுட்டி - 5 ஆண்டு சிறை

பிரிந்து சென்ற காதலியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற காதலனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், தன்னுடன் பள்ளியில் படித்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்து  கோவையில் அப்பெண் வேலை பார்த்து வந்த நிலையில், தன் சொல்படி நடக்க வேண்டும் எனக் கூறி, அப்பெண்ணின் மீது ராஜேஷ் ஆளுமையை செலுத்த முயற்சித்துள்ளார்.

மேலும் படிக்க | 2022-23 ம் நிதியாண்டில் வருமான வரி வசூல் 3000 கோடி அதிகரித்துள்ளது -வருமான வரித்துறை தலைமை ஆணையர்

இதனால் காதலை முறித்துக் கொள்வதாக அப்பெண் தெரிவித்திருக்கிறார்.  ஆத்திரமடைந்த ராஜேஷ், அப்பெண்ணை கொலை செய்யும் நோக்குடன், ஏற்கனவே கொடுத்த பரிசுப் பொருட்களை திருப்பிக் கொடுக்க இருப்பதாக கூறி, அண்ணாநகர் டவர் பூங்காவுக்கு வரும்படி அப்பெண்ணை அழைத்துள்ளார்.

அதன்படி 2018ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி அங்கு வந்த அப்பெண்ணை, ராஜேஷ், கத்தியால் குத்திவிட்டு, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் அப்பெண் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ராஜேஷுக்கு எதிராக அண்ணாநகர் போலீசார் பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாருக்,  ராஜேஷ் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராத தொகையில் 15 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.