உதயநிதி நடிக்க கூடாதா?...இனி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடக்கூடாது...நடிகர் விஷால் அதிரடி!

உதயநிதி நடிக்க கூடாதா?...இனி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடக்கூடாது...நடிகர் விஷால் அதிரடி!
Published on
Updated on
1 min read

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்...

வாழ்த்து மழையில் உதயநிதி:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, இன்று காலை ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து உதயநிதி அமைச்சரானதை பாராட்டி, அரசியல் தலைவர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் விஷால் வாழ்த்து:

அந்த வகையில், விஷால் ரசிகர் நற்பணி மன்றம் மூலம் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நண்பன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த விஷால், தனது 9 ஆண்டுகால கனவு நிஜமாகியுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சருக்கு பதிலடி:

தொடர்ந்து, அவரிடம் அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், இனி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திரைப்பட பாடல்களை மேடைகளில் பாடாமல் இருக்க வேண்டும் என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாட்டு பாடுவதே வழக்கம்:

முன்னதாக, திமுக அரசு வாரிசு அரசியல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த நிலையில், உதயநிதி அமைச்சரானால் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்தார். ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் மேடையில் பேசும் போதெல்லாம் ஏதாவது ஒரு சினிமா பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் அமைச்சரான உதயநிதி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு நடிகர் விஷால் அதிரடியாக பதிலளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com