OMR சாலையில் வழிப்பறி செய்யும் போலி காவலர்கள்... காதலர்களே உஷார்!!

OMR சாலையில் வழிப்பறி செய்யும் போலி காவலர்கள்... காதலர்களே உஷார்!!
Published on
Updated on
1 min read

பணி முடித்துவிட்டு, OMR சாலை வழியாக சென்றுகொண்டிருந்த காதலர்கள் இருவரை மடக்கி, போலி காவலர்கள் இருவர் வழிப்பறி செய்துள்ளனர்.

ஓ.எம்.ஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த காதலர்களிடம் பணம் பறித்த போலி காவலர்களை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது காதலியும் சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். 

நேற்றிரவு வழக்கம் போல், பணி முடித்துவிட்டு OMR சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மடக்கிய இருவர் தாங்கள் போலிஸ் என கூறி மிரட்டி பணம் பறித்துள்ளனர். 

அப்போது அவர்களை கண்ட நிஜ போலீசார் அந்த இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த இருவரும் பெரும்பாக்கத்தை சேர்ந்த கலீல் மற்றும் பி.இ. பட்டதாரியான சூர்ய பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் இருவரும் போலிஸ் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com