வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து... சிக்கிய ஹவாலா பணம்...!!

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து... சிக்கிய ஹவாலா பணம்...!!
Published on
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெஜிமென்ட் பஜாரில் உள்ள சீனிவாஸ் என்பவர் வீட்டில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.  வீட்டில் ஏராளமான மர சாமான்கள் இருந்ததால் தீ மளமளவென எரிந்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

பின்னர் போலீசார் விசாரனை செய்ததில் ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நிறுவனத்தில் டிஜிஎம் ஆக சீனிவாஸ் பணியாற்றி வருவதும் அதே நிறுவனத்தில் அரசு மின் ஒப்பந்த தொழில் செய்து வருவது தெரிய வந்தது. ஆனால் தீ விபத்தின் போது ஸ்ரீனிவாஸ் ஐதராபாத்தில் இல்லை என்பதும் அவரது அவரது குடும்பத்தினர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தது தெரியவந்தது. இதனை ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள்  வீட்டிற்கு வந்ததும் படுக்கையறையில் இரும்பு பெட்டகத்தில் வைத்திருந்த  பணம் பாதுகாப்பாக உள்ளதா என பார்த்துக் கொண்டிருக்கும் போதே  போலீசார் அங்கு வந்தனர். 

அப்போது வீட்டில் ரூ.1 கோடியே 64 லட்சத்து 45 ஆயிரம் பணம், தங்கம், வெள்ளி என இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு  கொண்டு சென்றனர்.  தற்போது இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீனிவாஸ் விசாகப்பட்டினம் சென்றுள்ள நிலையில் அவர் வந்தபிறகு இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா அல்லது ஹவாலா பணமா என விசாரித்து அதன் பிறகு ஆவணங்கள் இல்லாவிட்டால் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com