சியாச்சின் பனிமலை ; முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..!

சியாச்சின் பனிமலை ; முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..!
Published on
Updated on
1 min read

உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 

இமயமலையில் உள்ள சியாச்சின் பனி மலைப்பகுதி நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் உடையது. இங்கு இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன், கடுங்குளிருடனும் போராட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் சியாச்சினில் முதல்முறையாக, கேப்டன் சிவா சௌகான் என்ற பெண் ராணுவ அதிகாரி பணி அமர்த்தப்பட்டுள்ளார். சிவில் பொறியியல் பட்டதாரி ஆன இவர் பணியமர்த்தப்படுவதற்கு முன்பாக பனிச்சுவர் ஏறுவது, பனிச்சரிவிலும், பனிப்பறைக்கு இடையிலும் சிக்கியவர்களை மீட்பது என ஒரு மாதத்திற்கு கடுமையான பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். மேலும் ராணுவத்தின் போர் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், இவர் தலைமையிலான குழு 3 மாத காலத்துக்கு ஈடுபடுத்தப்படுவார்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

-- சுஜிதா ஜோதி 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com