அரசு மற்றும் கலை கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு...!

அரசு மற்றும் கலை கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு...!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே, மே 19 ஆம் தேதியுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 நாட்கள் கால அவகாசம் கூடுதலாக வழங்கப்பட்டு மே 22 ஆம் தேதியுடன் அதாவது நேற்றுடன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, 3,01,446 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கக்கூடிய நிலையில், 2,46,295 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். 

இதையும் படிக்க : மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக...குடிக்க வைக்கும் அரசாக செயல்படுகிறது திமுக அரசு...ஓபிஎஸ் கண்டனம்!

இந்நிலையில் மே 25-ம் தேதி மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும், பல்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி தொடங்கி ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கும் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.