பொன்னமராவதி யில் மீன்பிடி திருவிழா ...! மீன்பிடித் திருவிழா; ஏராளமானோர் பங்கேற்பு...!

பொன்னமராவதி யில் மீன்பிடி திருவிழா ...! மீன்பிடித் திருவிழா; ஏராளமானோர் பங்கேற்பு...!
Published on
Updated on
1 min read

பொன்னமராவதி அருகே நவகுடியில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்கவும் வேண்டி 5 வருடத்திற்கு பிறகு  மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிசி,பாவ்லா கட்லா,ஜிலேபி கெண்டை அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்து பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்..

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நெல் அறுவடைக்குப்  பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசனகண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். 
ஜாதி,மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி  இந்த மீன்பிடி திருவிழாவை ஊர் ஒற்றுமைக்காக நடத்துவர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசமலை அருகே உள்ள நவகுடி கிராமத்தில் உள்ள கண்மாயில்  மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. 5 வருடத்திற்கு பிறகு இந்த வருட மீன்பிடி திருவிழாவில் அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில்  ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைபிடித்தனர். 

அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கட்லா, சிலேபி,அயிரை, கெண்டை ,மாவ்லா  ஆகிய மீன்கள் கிடைத்தன.தூரி என்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். முன்னதாக ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வெளியூர் மக்களும்  கண்மாய்க்கு வந்து மகிழ்ந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com