வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் வனத்துறை...!!

வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் வனத்துறை...!!

Published on

கோடை காலம் தொடங்கியுள்ளதால் திருவண்ணாமலையில் வனத்துறை வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஆயிரகணக்கான மான்கள், கட்டு பன்றிகள், செந்நாய், குரங்கள் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன, இந்த வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகின்றது, இதனால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக சில மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன, அவ்வாறு வரும் மான்களை சில சமயங்களில் நாய்கள் துரத்தி கடித்து கொன்று விடுகின்றன, வன விலங்குகள் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறை மூலம் டிராக்டர் டேங் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் பணி இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மலையை சுற்றி வனப்பகுதியில் மற்றும் கவத்தி மலை காப்பு காடு கண்ணமட காப்பு காடு சொரகுளத்தூர் காப்பு காடு என உள்ளிட்ட 13 பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் உள்ளன வன சரக சீனிவாசன் தலைமையில் தண்ணீர் தொட்டியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது, இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே செல்லாமல் இருக்க தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com