எடுத்த சபதம் முடித்த GOAT மெஸ்ஸி..! மரடோனாவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட வெற்றி..!

எடுத்த சபதம் முடித்த GOAT மெஸ்ஸி..! மரடோனாவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட வெற்றி..!

Published on

நிறைவேற்றப்பட்ட சப்தம்

உலகக்கோப்பை கால்பந்து பைனல் வரை சிறப்பாக விளையாடிய அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும் கோப்பையை வென்று மரடோனாவுக்கு சமர்பிப்பேன் என்ற சபதத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

மூன்றாவது உலகக் கோப்பை

இருமுறை உலக சாம்பியனாகவும், உலகக் கோப்பையை வெல்லும் அணியாகவும் கருதப்பட்ட அர்ஜெண்டினா அணி தனது முதல் போட்டியில், சிறிய அணியான சவுதி அரேபியாவிடம் தோல்வி அடைந்தது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற அர்ஜென்டினா அணி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

சாதனை படைத்த GOAT 

35 வயது நிரம்பிய அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கோப்பையை பெற்று தந்துள்ளார். உலகக்கோப்பையை வென்று அர்ஜெண்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் மறைந்த மரடோனாவுக்கு சமர்ப்பிப்பேன் என்ற சபதம் செய்திருந்தார். இந்நிலையில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் 7 கோல்களை அடித்து புதிய சாதனையை படைத்தார்.

சிறந்த விளையாட்டு வீரர்கள்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட மெஸ்ஸிக்கு தங்க கால்பந்து பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல உலகக் கோப்பை தொடரில் 8 கோல்களை அடித்து புதிய  சாதனை படைத்த பிரான்சு வீரர் எம்பாப்வேக்கு தங்க ஷூவும், சிறப்பாக செயல்பட்ட அர்ஜெண்டினா கோல் கீப்பர் தங்க  மிலினோ மார்ட்டிநெஸ்க்கு தங்க கையுறையும் பரிசாக வழங்கப்பட்டன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com