பல சர்ச்சைகளுக்குப் பின் முதல் முறை பொது நிகழ்வில் கலந்து கொண்ட ராஜபக்சே...
பதவி விலகிய பின்னர் முதல் முறையாக ஒரு பொது நிகழ்வில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்துக்கொண்டார்.

ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பொது நிகழ்வில் முதல் முறையாக கோத்தபய ராஜபக்சே நிகழ்வொன்றில் இன்று (நவ.18) கலந்துக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இவ்வாறு கலந்துக்கொண்டிருந்தார். மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, பின்னர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
மேலும் படிக்க | ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கிறாரா ரணில்...நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!
இதனைத் தொடர்ந்து, நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சே பொது நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவில்லை.
எனினும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவராக சுப்ரமணியம் சுவாமியுடன், கோத்தபய ராஜபக்சே கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது.
மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்காது-அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்!