"அடுத்த ஆண்டிற்குள் அனைத்து இரயில் வழிதடங்களுக்கும் கவாச் தொழில் நுட்பம்" ரயில்வே செய்தி தொடர்பாளர் உறுதி!

"அடுத்த ஆண்டிற்குள் அனைத்து இரயில் வழிதடங்களுக்கும் கவாச் தொழில் நுட்பம்" ரயில்வே செய்தி தொடர்பாளர் உறுதி!
Published on
Updated on
1 min read

டிசிஏஎஸ் எனப்படும் ரயில் மோதல் தவிர்ப்பு சாதனம் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் நிறுவப்படும் என ரயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா உறுதி அளித்துள்ளாா். 

ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் இதுவரை 288 போ் உயிாிழந்துள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே விபத்திற்கு காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதற்கிடையே தற்போது கவாச் என்ற சாதனம் மூலம் ரயில் விபத்துகளைத் தடுக்கலாம் என்று சமூக ஊடகங்களில் அனைத்து தரப்பினரும் கருத்துக்களை தொிவித்து வருகின்றனா்.

கவாச் விபத்து தடுப்பு அமைப்பு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதற்கான சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், அதில் தாமும் பங்கேற்று சோதனை செய்ததாகவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தின் போது கவாச் அமைப்பு ஏன் செயல்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா பதிலளித்து பேசுகையில், போது, டிசிஏஎஸ் எனப்படும் கவாச் அமைப்பு தற்போது டெல்லி- ஹவுரா, டெல்லி- மும்பை வழித்தடங்களில் மட்டுமே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. விபத்து நடந்த பாதையில் கவாச் அமைப்பு நிறுவப்படவில்லை என்று தொிவித்தாா். மேலும் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் இந்த தொழில்நுட்பம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் உறுதி அளித்துள்ளாா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com