மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம்...!!

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம்...!!
Published on
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு 4 கிராம் தங்கத் தாலி வழங்கும் திட்டத்தினை இன்று சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

2023 - 24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயிலில் 2 மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு 4 கிராம்  தங்கத் தாலி வழங்கி திட்டத்தை  அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் சேகர்பாபு,

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் பராமரிப்பு, குடமுழக்கு விழா, திருத்தேர் பராமரிப்பு, திருக்கோவிலுக்கு சம்பந்தமான நிலங்கள் மீட்டெடுப்பு என பல்வேறு முனைப்பான பணிகளை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலைத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடந்தால் கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு தற்போது அது நடைமுறையில் உள்ளது .

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு துறை சார்பாக பல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் இந்து சமய அறநிலை துறையால், மாற்று திறனாளிகள் கோயில்களில் திருமணம் செய்து கொண்டால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அந்த அறிவுப்பை செயல்படுத்தும் விதமாக இன்று 2 மாற்றுத் திறனாளி திருமணத்திற்கு 4 கிராம் தாலிதங்கம் மற்றும் திருமணத்திற்கான பரிசு பொருட்களும் வழங்கி திருமணம் நடத்தி வைத்தோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com