புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை...!!

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை...!!

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, சவரன் 44 ஆயிரத்தைக் கடந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

கடந்த 10 நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்தது.  இந்நிலையில், இன்று, சவரன் 44 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 880 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்த, 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து, 560க்கும் விற்பனை ஆகிறது. 

இதேபோன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.  கிராமுக்கு ஒரு ரூபாய் 30 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் 40 காசுகளுக்கும், கிலோவுக்கு, ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ பார் வெள்ளி 74ஆயிரத்து, 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விலை உயர்வால் திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

இதையும் படிக்க:   நில ஒதுக்கீடு ஊழல்... அமைச்சர் பெரியசாமிக்கு தண்டனை?!!