”நல்ல செய்தி தபாலில் வரும் கெட்ட செய்தி தந்தியில் வரும்...” கமல்ஹாசன் பேச்சு!!

”நல்ல செய்தி தபாலில் வரும் கெட்ட செய்தி தந்தியில் வரும்...” கமல்ஹாசன் பேச்சு!!
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ”எட்டிய எழுபது அகவையில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் துவக்கி வைத்தார்.  

அரசியலுக்கு அப்பாற்பட்டது:

அப்போது பேசிய கமல்ஹாசன் இரவும் பகலுமாக இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது எனவும் முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியின் முக்கியத்துவம் உணர்ந்ததால் படப்பிடிப்பை சற்று ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  முதலமைச்சர் ஸ்டாலினை கலைஞர் மகன் என்ற காலத்தில் இருந்தே தனக்கு தெரியும் எங்களுடைய நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தலைவரின் மகனாக:

மாபெரும் தலைவர் தந்தையின் மகனாக இருக்கும் சந்தோசம் நிறைய என்றாலும் சவால்களையும் ஏற்று படிப்படியாக தொண்டனாக இளைஞர் அணியின் தலைவனாக,சட்டமன்ற உறுப்பினராக மேயராக,அமைச்சராக,துணை முதலமைச்சராக பதவியேற்று இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக படிப்படியாக உயர்ந்தது அவரின் பொறுமையை மட்டுமல்ல திறமையையும் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும், நல்ல செய்தி தபாலில் வரும் கெட்ட செய்தி தந்தியில் வரும் என்பார்கள் இதெல்லாம் நல்ல செய்தி தபால் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கூட்டணி:

கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது எனக் கூறிய அவர் சீன் பை சீன் ஆக தான் நகர்த்த வேண்டும் எனவும் இப்போதே கிளைமாக்ஸ் சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.  மேலும் திமுக கொள்கை உடன் ஒத்துப்போகிறீர்களா என்ற கேள்விக்கு ரொம்ப நாளா என்ற கமல்ஹாசன் முதலமைச்சருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com