காலி மதுபாட்டில்களை அரசே திரும்ப பெற  நடவடிக்கை எடுக்க வேண்டும்..!  நாகை விவசாயிகள் கோரிக்கை..! 

காலி மதுபாட்டில்களை அரசே திரும்ப பெற  நடவடிக்கை எடுக்க வேண்டும்..!  நாகை விவசாயிகள் கோரிக்கை..! 
Published on
Updated on
1 min read

நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில்,ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். 

அந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள்,  கடந்த பருவத்தில் நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்று மத்திய குழு அறிக்கையை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், தமிழக அரசு நிவாரண உதவி தொகையாக எக்டருக்கு 20,000 அறிவித்து இருந்தது, எனக்கு கூறினர்.

இந்நிலையில்  அந்த உதவித்  தொகை போதுமானதாக  இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் எக்டருக்கு 35 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்றும்,  பயிர் காப்பீடு துறையிடம் தமிழக அரசு தொடர்பு கொண்டு மறு ஆய்வு செய்து பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை 100 விழுக்காடு வழங்கிட வேண்டும்  எனவும் கோரிக்கை வைத்தனர். 

அதோடு, தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,  கடந்தாண்டு நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் குருவை தொகுப்பு போதுமான அளவு வழங்கப்படவில்லை எனவுய்ம்  குற்றச்சாட்டுகின்றனர்.

அதன்படி,  நடப்பாண்டு சாகுபடி பரப்பளவுக்கு  ஏற்றார் போல் குருவைத் தொகுப்பை வழங்க வேண்டியும், நடப்பாண்டில் குருவை சாகுபடிக்கு காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆகாய தாமரை நீர்நிலைகளில் இருந்து அகற்றக்கோரியும், விவசாய நிலங்களில் வீசப்படும் மது பாட்டில்களால் விவசாயிகளும், கால்நடைகளும்  பாதிக்கப்படுவதால் காலி மதுபாட்டில்களை அரசே திரும்ப பெற நாகை மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும்,  மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க இன்றும் 50 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் உடனடியாக தூர்வாரும் பணியை துவங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com