குண்டர் சட்டத்திற்கு கையெழுத்திடும் அதிகாரத்தை மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கெடு....?

குண்டர் சட்டத்திற்கு கையெழுத்திடும் அதிகாரத்தை மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கெடு....?
Published on
Updated on
1 min read

மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து,  காவல் துறை  ஐஜி அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கிடும் வகையில் தேவையான சட்ட திருத்ததை 4 வாரங்களில் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலருக்கு  உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ், தன் மகன் தமிழழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யகி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் மனுதாரர் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தனர். 

மேலும், மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் மாவட்ட கலெக்டர்களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரிக்கிறது.  எனவே. இந்த அதிகாரத்தை ஐஜி அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கிடும் வகையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள்  சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , உள்துறை செயலாளர் தரப்பில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில்,  1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 14 இன் பிரிவு 3 (2) க்கு திருத்தம் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின்,  பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.  முடிவெடுக்க 4 வார கால அவகாசம்  வேண்டும் என பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வேண்டுகோள்படி,  சட்ட திருத்தம் செய்வதற்காக , 4 வாரகாலஅவகாசம் வழங்கப்படுகிறது. இதற்குள் தேவையான திருத்தங்கல் மேற்கொண்டு,  அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com