இந்தியாவிற்கு மனித வெடிகுண்டு...டெலிகிராம் மூலம் தேர்வு.....பின்னணி என்ன???

இந்தியாவிற்கு மனித வெடிகுண்டு...டெலிகிராம் மூலம் தேர்வு.....பின்னணி என்ன???

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் குழுவைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மத்திய ஆசிய பகுதியில் உள்ள நாட்டை சேர்ந்தவர் எனவும் ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.  அவர் மனித வெடிகுண்டாக செயல்பட திட்டமிடிருந்தார் எனவும் அந்த அமைப்பு இந்திய ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர் துருக்கியில் மனித குண்டாக செயல்பட பயிற்சியளிக்கப்பட்டவர் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967ன் படி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அதனுடைய சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்ய பல்வேறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறது எனவும் அவர்களின் நடவடிக்கைகள் உளவுத்துறையால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது எனவும் இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக கிடைத்த தகவலின் படி கைது செய்யப்பட்ட மனித வெடிகுண்டு மனிதரின் பெயர் அஸ்மவ் எனவும் அவர் இந்தியாவிற்கு ஏப்ரல் மாதத்தில் வர இருந்ததாகவும் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   மேலும் இவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் டெலிகிராம் ஆப் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிக்க: என்ன ஆனது ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டம்.....!!!!