சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்த, நூற்றுக்கணக்கான மியான்மர் மக்கள்!!

சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்த, நூற்றுக்கணக்கான மியான்மர் மக்கள்!!

Published on

சட்டவிரோதமாக, மியான்மரை சேர்ந்த 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினை வன்முறையில் தவிக்கும் மணிப்பூர் மாநிலம், மியான்மர் நாட்டுடன் 398 கிலோ மீட்டா்  எல்லையை கொண்டுள்ளது. இதனால் மியான்மரில் இருந்து அந்நாட்டு மக்கள் மணிப்பூருக்குள் நுழைவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இந்நிலையில், மியான்மரை சோ்ந்தவா்கள் 718 பேர் கடந்த வாரம் மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனா் என மாநில தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார். 

மேலும், இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, இந்திய- மியான்மர் எல்லையைக் காக்கும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தொிவித்துள்ளாா். இதற்கிடையே மணிப்பூாில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக தாக்குதல், அத்துமீறல் நடந்ததாக சமூக ஊடகங்களில் வலம் வரும் தகவல்களும், வீடியோக்களும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த கலவரம் தொடா்பாக தற்காலிகமாக முடக்கப்பட்ட இணையசேவையை,  சுமார் 3 மாதங்களுக்கு பின்னா் ரத்து செய்து, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com