“நான் அரசியல் பேச விரும்பவில்லை.....” உதயநிதி ஸ்டாலின்!!!

“நான் அரசியல் பேச விரும்பவில்லை.....” உதயநிதி ஸ்டாலின்!!!

பெண்கள் எது நல்லது, கெட்டது என பகுத்தறிந்து செயல்பட வேண்டும் எனவும் பெண்களுக்காக வழங்கப்படும் கடன்களை அனைத்தையும் கடனாக பார்க்காமல் பெண்களின் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையாக முதலமைச்சர் பார்க்கிறார் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுயபரிசோதனை:

ஊரக உள்ளாட்சி துறை செயலாளர் அமுதா அவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு தொண்டை சரியில்லாத காரணத்தால் எங்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் தைலத்தை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்கள், சமூகரீதியில் பாலின சமத்துவத்தை  உறுதி செய்துள்ளோமா என்பதை நாம் சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசியல் பேச..:

மேலும் சமூகம், அரசியல், கல்வி போன்ற துறைகளில் பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது எனவும் பெண்களைப் போலவே ஆண்களையும் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று முதன்மைச் செயளார் கூறியதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  அனைவர் கைகளிலும் மொபைல் உள்ளதால் பெண்கள் எது சரி, தவறை என்பதை உணர்ந்து பகுத்தறிந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர் பல்வேறு கொள்கை கொண்ட இயக்கங்களில் இருந்து நீங்கள் வந்துருப்பீர்கள் அதனால் நான் அரசியல் பேச விரும்பவில்லை எனவும் பேசியுள்ளார்.

இலவசம் அல்ல..:

நீதிக்கட்சி காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை, சொத்துரிமை, கைம்பெண் உதவித் தொகை திட்டம் போன்றவை திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது எனவும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சியில் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்பது மற்ற மாநிலங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் போதுதான் தெரிகிறது எனவும் கூறிய உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சரின் முதல் கையெழுத்தான, கட்டனமில்லா பேருந்து திட்டத்தை  இலவச பேருந்து திட்டம் என கூறக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் எனவும் ஏனென்றால் அது அவர்களின் உரிமை என முதலமைச்சர் கூறி உள்ளார் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:   எல்லோருக்குமான வளர்ச்சி.... பெண்களை உள்ளடக்கிய வளர்ச்சி...!!