"இந்தியா என்ற தனது வீட்டுக்காக பாஜகவை எதிர்ப்பேன்" - ராகுல் காந்தி

"இந்தியா என்ற தனது வீட்டுக்காக பாஜகவை எதிர்ப்பேன்" - ராகுல் காந்தி

இந்தியாவை தனது வீடாகக் கருதி பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தெலங்கானாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜக்தியால் தெருமுனைக் கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார்.

அப்போது பாஜக வற்புறுத்தலால் தன்மீது 30 வழக்குகள் உள்ளதாகவும், மக்களவைப் பதவி பறிக்கப்பட்டு தனது வீடு பறிக்கப்பட்டபோதும் முழு இந்தியாவையும் தனது வீடாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

கூட்டத்திற்கு முன்னதாக சாலையோரக் கடையில் ராகுல்காந்தி தோசை சுட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.