ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி - 100 கோடி வசூல் செய்து கொடுத்த ஏஜெண்ட் கைது!!!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி - 100 கோடி வசூல் செய்து கொடுத்த ஏஜெண்ட் கைது!!!
Published on
Updated on
1 min read

100 கோடி வசூல் செய்து கொடுத்த ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் முக்கிய தரகராக செயல்பட்ட மேலும் ஒருவர் கைது.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற இடைத்தரகர் நூற்றுக்கணக்கான முதலீட்டாளரிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். இவரை நேற்று பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வெங்கடேசன் காஞ்சிபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான முதலீட்டாளரிடமிருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை பணம வசூலித்து கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட வெங்கடேசன் இடமிருந்து ஒரு சொகுசு கார், இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம், செல்போன், லேப்டாப், பாஸ்போர்ட் உள்ளிட்டவை  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 வெங்கடேசன் வங்கி கணக்குகளை ஆய்வு செய்வதற்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.  இதுவரை நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com