திமுக அரசு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால்....  சாலையை மறைத்து போராடுவோம்: அண்ணாமலை!!

திமுக அரசு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால்....  சாலையை மறைத்து போராடுவோம்: அண்ணாமலை!!

இன்னும் 48 மணி நேரத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாடு அரசு சுமூகமான முடிவு எடுக்கவில்லை என்றால் வருகின்ற 15-ம் தேதி பாஜக  போராட்டத்தை கையில் எடுக்கும் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் திமுக அரசு தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள படி 177 ஐ நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து நான்காவது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரடியாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தனது ஆதரவை தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியர்  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்  நல சங்கம் சார்பில் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறினார்.

மேலும் இதற்கு முன்பு கூட வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போது நமது கட்சியின் சார்பில் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர் எனவும் அவர்களின் கோரிக்கைகள் மீது மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று டிபிஐ வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் குறிப்பாக கழிப்பறை குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

தங்கள் தேர்தல் வாக்குறுதி 177 ல் கூறியபடி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்குவதாக திமுக ஆட்சி தெரிவித்திருந்தது எனக் கூறிய அவர் இரண்டு வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்ற வில்லை எனவும் ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக பாஜக வந்துள்ளது எனவும் கூறினார்.

மேலும் இன்னும் 48 மணி நேரத்தில் திமுக அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக முடிவை அளிக்க வேண்டும் என மாநில அரசை வேண்டுகிறோம் எனவும் இல்லையென்றால் அவர்களின் போராட்டத்தில் பாஜக சேரும் நிலை உருவாகும் என்றும் மிகப்பெரிய அளவில் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு தயாராகியுள்ளோம் எனக் கூறிய அண்ணாமலை நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் எனவும் தெரிவித்தார் .  14 ஆம் தேதிக்குள் திமுக அரசு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால் 15 ஆம் தேதி பாஜக இந்த  சாலையை மறைத்து போராடுவோம் என உறுதிபட கூறினார்.

இதையும் படிக்க:  ஸ்டேட்டஸ் வைத்தால் ஸ்மார்ட் போன்...!!!