மாநகராட்சி மின் மயானங்களில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்தால் தகுந்த நடவடிக்கை - மேயர் எச்சரிக்கை

மாநகராட்சி மின் மயானங்களில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்தால் தகுந்த நடவடிக்கை - மேயர் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று கூடியது.
சென்னை மாநகராட்சி ஆணையாளராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் மாமன்ற கூட்டம் இதுவாகும். முதல் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Greater Chennai Corporation on Twitter: "பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., இன்று ...

மேலும் படிக்க | 2025 - க்குள் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் -அமைச்சர்!!!!


மேலும் இக்கூட்டத்தில் மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முக்கிய தீர்மானங்களை பொறுத்தவரையிலும்,அடையார் மண்டலத்தில், வார்டு 173 வது  பகுதியில் அடையாறு காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைக்க உள்ள பூங்காவிற்கு டாக்டர். கலைஞர் மு கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்டுவதற்கு மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.பட்ஜெட்டில் அறிவித்தபடி, சென்னை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து நான்கு வண்ண டி.சர்ட் கொள்முதல் செய்ய  62 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மன்ற அனுமதி வழங்கியுள்ளது.இதை தொடர்ந்து, பட்ஜெட்டில் அறிவித்த படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில்  இசை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு வயலின், ட்ரம் செட் உள்ளிட்ட 10 இசை கருவிகள் வாங்க  4.99லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய மன்றம் அனுமதி வழங்குகிறது. 

3.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சென்னை ரிப்பன் மாளிகையில் அன்று கூட்டத்தில் உள்ள ஒலிபெருக்கி அமைப்பினை மேம்படுத்தி புதிய டிஜிட்டல் முறையிலான ஒலிபெருக்கியை அமைக்க டெலிகேட் கலந்தாய்வு மைக்குகள், சேர்மன் மைக்குகள், அதனை சார்ந்த கட்டுப்பாட்டு கருவிகள் மென்பொருள் மற்றும் சர்வார்களை வழங்கி நிறுவி சோதனை செய்தல் மற்றும் இயக்கி வைக்கும் பணிக்காக 3.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதற்கு மற்றும் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க | நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும்!

கட்டணம் வசூலித்தால் தகுந்த நடவடிக்கை

மின் மயானம் 20 நாட்கள் இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!! - Tamil  Spark

இதனிடையே, கேள்வி நேரத்தின் போது பேசிய மன்ற உறுப்பினர்கள் சிலர் மாநகராட்சியின் தகனம் மற்றும் இடுகாட்டில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுப்பினர். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, அனைத்து மின் மயானங்கள் இடு கட்டிலும் புகார் எண் மற்றும் கட்டணமில்லா சேவை என தெளிவாக பலகை வைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி மின் மயானங்களில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்தார்.

மேயர் பிரியா + சிஎம்டிஏ.. சேகர் பாபுவிற்கு கிடைத்த மெகா வெற்றி.. பவரை  அள்ளிக்கொடுத்த ஸ்டாலின்.. ஏன்? | After Mayor Priya's posting, Minister  Sekar Babu gets the Chennai ...

 மேலும், சில திருமண மண்டபங்கள், தனியார் அரங்குகள்  மற்றும் திரையரங்குகள் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ள சொத்து வரியை கணக்கிட்டு வசூல் செய்தால் மாநகராட்சிக்கு நூறு கோடி ரூபாய் வரை வருவாய் கூடும் என கணக்கு குழுத் தலைவர் தனசேகரன், மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினார்.