அத்தி பழம் மாதிரி பிரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது....!!

அத்தி பழம் மாதிரி பிரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது....!!

தமிழக பட்ஜெட்  அத்தி பழம் மாதிரி பிரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  அப்போது அவர் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூப்ப்ய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.  இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் செல்லூர் ராஜுவும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை கீரின்வேஸ் சாலையில்  செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு  குடும்ப தலைவிக்கு ஆயிரம் உரிமம் தொகை 2.20 கோடி ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படுமென தெரிவித்துவிட்டு இப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் எனவும், இனிமேல் தான்  கணக்கெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது முன்னுக்கு பின் முரணான பித்தலாட்ட பட்ஜெட்டாக உள்ளது என செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

இதையும் படிக்க:   6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை....!!