பெசன்ட்நகரில்... "செந்நீர்க் காவியம்" திருச்சிலுவைப்பாதை!!

பெசன்ட்நகரில்... "செந்நீர்க் காவியம்" திருச்சிலுவைப்பாதை!!

புனித வெள்ளியையொட்டி சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற "செந்நீர்க் காவியம்" திருச்சிலுவைப்பாதை நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மக்களின் பாவங்களுக்காக இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.  இதன்படி, உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் இன்று காலையிலிருந்து சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகளும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவூட்டும் விதமான நிகழ்ச்சிகளும் நடைபெற்ற வந்தன.  அந்த வகையில்  சென்னையில் உள்ள புகழ்பெற்ற பெசன்ட் நகர் வேளாங்கண்ணி  தேவாலயத்தில் புனித வெள்ளியை ஒட்டி இயேசுவை சிலுவையிலிடும் நிகழ்வானது நடைபெற்றது.

சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயேசுவின் 14 ஸ்தல பாடுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றது.  இதைத்தொடர்ந்து மதியம் மூன்று மணி அளவில் இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் விடும் நிகழ்வு நடைபெற்றது

இந்த நிகழ்வை காண ஏராளமானோர் சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு வருகைதந்தனர்.  திருச்சிலுவைப்பாதை நிகழ்வையொட்டி சென்னை பெசன்ட் நகர் ஏலியட்ஸ் கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது திருச்சிலுவை பாதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான பொதுமக்கள் வந்ததால் போலீசார் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தனர்.

இயேசு சிலுவையில் அறையப்படும் நிகழ்வானது நடைபெற்ற பின்னர் மக்கள் தேவாலயத்திற்கு சென்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.

இதையும் படிக்க:    300 ரூபாய் லஞ்சம்... ஓராண்டு சிறை தண்டனை!!