சேலம் மாவட்டத்தில் 40 சதவீதம் பேர்  கூட தேர்வு எழுதவில்லை...தேர்வாணையம் அறிக்கை !!

சேலம் மாவட்டத்தில் 40 சதவீதம் பேர்  கூட தேர்வு எழுதவில்லை...தேர்வாணையம் அறிக்கை !!
Published on
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்-1 எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில்  குரூப் 1 தேர்வை   40 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை என அறிக்கை வந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 3,22,414 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1 லட்சத்து 31,457 பேர் தேர்வு எழுத வரவில்லை.சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 42 தேர்வு மையங்களில் 62 தேர்வு கூடங்களில் இத்தேர்வு நடைபெற்றது. 

மாவட்டம் முழுவதும் 18,678 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 11,238 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இத்தேர்வை கண்காணிக்கும் பணியில் 6 பறக்கும் படையினர், 16 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சிரமமின்றி வந்து செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com