அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்... அனைத்து மாநிலங்களின் அவசர கூட்டம்..!!!

அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்... அனைத்து மாநிலங்களின் அவசர கூட்டம்..!!!

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  25,587 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா தொடர்பான ஆய்வுகள் அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களின் உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பேசுகையில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளதோடு யாரும் பயப்படத் தேவையில்லை எனவும் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  

மேலும் கொரோனா சோதனை மற்றும் மரபணு வரிசை முறையை அதிகரிக்க வேண்டும் எனக் கூறிய அவர் கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்  கொரோனாவின் புதிய மாறுபாடு எவ்வாறு செயல்படும் என்பது குறித்து தற்போது எதுவும் கூறுவது கடினம் எனவும் கொரோனா வைரஸின் மாறுபாடுகள் மற்றும் துணை வகைகளின் வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதார துறாஇ அமைச்சர் கூறியுள்ளார்.  மேலும் இதுவரை பதிவாகியுள்ள வழக்குகளை ஆபத்தானது என கூற முடியாது என்றாலும் கொரோனா வழக்குகளின் வேகத்தைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா...!!