காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது தங்கம் வென்றது இந்தியா!

ஆண்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில், பளுதூக்கும் போட்டியில் 19 வயதே ஆன ஜெரெமி லால்ரினுங்கா தங்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது தங்கம் வென்றது இந்தியா!

2022 காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில், பளுதூக்கல் போட்டியில், ஜெரெமி லால்ரினுங்கா தங்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். தலை சிறந்த பளுதூக்கு வீரரான மீராபாய் சானு தனது வாக்குறுதியைக் காப்பாற்றி சனிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றதையடுத்து, தற்போது, காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா பெற்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 140 கிலோ எடையை ஏற்றி ஜெர்மி புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் மொத்தம் 160 கிலோ எடையை தூக்கி 300 கிலோ எடையுடன் முடித்தார். இது காமன்வெல்த் போட்டிகளின் (CWG) ஒரு புதிய சாதனையாகும்.

மிசோரமில் உள்ள ஐஸ்வாலைச் சேர்ந்த 19 வயதான அவர், 2018 யூத் ஒலிம்பிக்கில் 62 கிலோ பிரிவில் தங்கம் வென்றார், மேலும் கடந்த ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 67 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். எடிடியாங் ஜோசப் உமோஃபியாவுக்கு எதிராக போட்டியிட்ட ஜெரெமி, வெறும் 136 கிலோ கொண்டே துவங்கிய நிலையில், வெற்றிகரமான இரண்டாவது முயற்சியில் 140 கிலோ எடையை உயர்த்தினார்.

ஜெரெமி தனது இறுதி முயற்சியில் 143 கிலோவை இலக்காகக் கொண்டார், ஆனால் வெற்றிபெறவில்லை. தனது 165 கிலோ எடையின் இறுதி முயற்சியின் முடிவில் காயம் அடைந்ததால் முடிக்க முடியவில்லை. பின்னணியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும்போது, ​​மேடையில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

சமோவா வீராங்கனை வைபவா அயோனே ​​293 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கமும், நைஜீரியாவின் எடிடியாங் உமோஃபியா 290 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மீராபாய் சானு (தங்கம்), சங்கேத் சர்கார் (வெள்ளி), பித்யாராணி தேவி (வெள்ளி) மற்றும் குருராஜ் பூஜாரி (வெண்கலம்) ஆகியோரைத் தொடர்ந்து, பளுதூக்குதல் அரங்கில் இந்தியா பெற்ற ஐந்தாவது பதக்கமாகும்.

தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரரான லால்னிஹ்ட்லுங்காவின் மகன், லால்ரினுங்கா, தனது தந்தையைப் போலவே விளையாட்டு வீரராக விரும்பி, பளு தூக்குதலுக்கு மாறியிருக்கிறார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்