" நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்" மத்திய அரசு அறிவுறுத்தல்!!

" நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்" மத்திய அரசு அறிவுறுத்தல்!!

போர்க்கால அடிப்படையில் நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேற்கு அமெரிக்க நாடான நைஜர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிபர் முகமது காசிம் ராணுவ புரட்சியால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பதற்றம் குறைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பள்ளி வாசல்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக ஒரு தரப்பினர் பிரான்ஸ் நாட்டிற்கு எதிராகவும், ரஷ்யா வாழ்க போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நைஜர் நாட்டில் நடைபெறும் அடுத்தடுத்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, நிலைமை சீராகும் வரை, போர்க்கால அடிப்படையில் நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com