"2040-க்குள் நிலவுக்கு இந்தியர்களை அனுப்ப வேண்டும்" பிரதமர் மோடி!

Published on

ககன்யான் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி மையத்தை உருவாக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும் என்றும் 2040 ஆம் ஆண்டு நிலவுக்கு இந்தியர்களை அனுப்பும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com