இந்தியை திணிக்க முயல்கிறாரா அண்ணாமலை....!!

இந்தியை திணிக்க முயல்கிறாரா அண்ணாமலை....!!
Published on
Updated on
2 min read

அதிமுக கூட்டணி விஷயத்தில் எதுவும்  கல்லில் எழுதப்பட்டது கிடையாது என்றும் தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கென தனி இலக்கு இருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலக்கிய விழா:

சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள நாரத கனா சபாவில் சென்னை இலக்கிய விழா மூன்றாம் ஆண்டு பதிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.  

தலைமையே முடிவு:

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ் பி வேலுமணியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது மட்டுமே என்றும் அரசியல் ரீதியாக எதுவும் கிடையாது எனவும் குறிப்பிட்டார். 

மேலும்,வானதி சீனிவாசன் உட்பட அனைவரும் இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் எனவும் பாஜக தனித்து போட்டி என பொதுவெளியில் நான் எங்கும் கூறவில்லை எனவும் தெரிவித்த அண்ணாமலை கட்சி வளர்வதற்கு என்று எனக்கு தனி இலக்கு இருக்கிறது எனவும் அது கூட்டணியிலா இல்லை தனித்தா என்பதை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் எனவும் கூறினார்.

கிளீன் பாலிடிக்ஸ்:

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஒருங்கிணைந்த அதிமுக ஒருங்கிணைப்பு இல்லாத அதிமுக என சொல்வதற்கான உரிமை தனக்கு கிடையாது என்றும் கட்சியுடன் தான் கூட்டணி எனவும் தனி மனிதருடன் கூட்டணி கிடையாது எனவும் குறிப்பிட்டார்.  மேலும் கிளீன் பாலிடிக்ஸ் என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்றும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி மக்கள் பிரதிநிதியாக வருவதில் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்தார்.

காவல்துறை நடவடிக்கை:

ஆருத்ரா போன்ற நிதி நிறுவனங்களால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் இதில் பாஜக நிர்வாகி மட்டும் இல்லாமல் யாராக இருந்தாலும் தவறான முறையில் முதலீடு செய்து ஒரு ரூபாய் சென்று இருந்தாலும் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது முதலும் முடிவுமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ரம்மி தடை:

ஆன்லைன் ரம்மியை கேம் ஆஃப் சான்ஸ் க்குள் கொண்டுவர தமிழக அரசு வல்லுனர் குழுவை அமைத்து அனைத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டையும் ஆராய்ந்து  நுணுக்கமான வரவை உண்டாக்க வேண்டும் என்றும் பாஜக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கூறுவதாகவும் ஆனால் அதை முறையாக செய்யுங்கள் என அரசை வலியுறுத்துகிறோம் எனவும் தெரிவித்தார்.

இந்தி வேண்டும்:

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது என  மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாஜகவில் கூட்டணியை முடிவு செய்வது தேசிய தலைமை தான் எனவும் தெரிவித்தார் அண்ணாமலை.

இலக்கில் பயணம்:

அதிமுக கூட்டணி விஷயத்தில் எதுவும்  கல்லில் எழுதப்பட்டது கிடையாது  எனக் கூறிய அண்ணாமலை இன்னும் தேர்தலுக்கு ஒன்பது மாதம் இருக்கும் நிலையில் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் பயணிக்க தொடங்கி விட்டேன் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com